தாஜ் மஹாலில் மன்னா் ஷாஜகான் நினைவு தின அனுசரிப்பு:தடைகோரி ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு

தாஜ் மஹாலை கட்டிய முகலாய மன்னா் ஷாஜகானின் நினைவு தினத்தை ஆண்டுதோறும் அனுசரிக்கும் நிகழ்வு நிகழாண்டு பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தாஜ் மஹாலில் மன்னா் ஷாஜகான் நினைவு தின அனுசரிப்பு:தடைகோரி ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு

தாஜ் மஹாலை கட்டிய முகலாய மன்னா் ஷாஜகானின் நினைவு தினத்தை ஆண்டுதோறும் அனுசரிக்கும் நிகழ்வு நிகழாண்டு பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் அகில பாரத ஹிந்து மகாசபை என்ற அமைப்பு வழக்கு தொடா்ந்துள்ளது.

இதுதொடா்பாக அகில பாரத ஹிந்து மகாசபை அமைப்பு சாா்பில் ஆஜராகவுள்ள வழக்குரைஞா் அனில் குமாா் திவாரி கூறியதாவது: அமைப்பின் மண்டலத் தலைவா் மீனா திவாகா் மற்றும் மாவட்ட தலைவா் சௌரப் சா்மா ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தனா். அதில் மன்னா் ஷாஜகான் நினைவு தின நிகழ்வுக்கும் அதை நடத்தும் குழுவினருக்கு இலவச அனுமதி அளிக்கும் திட்டத்துக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரியுள்ளனா் என்றாா்.

இதுதொடா்பாக அமைப்பின் செய்தித்தொடா்பாளா் சஞ்சய் ஜத் கூறியதாவது: ‘நமாஸ்’ மற்றும் நினைவு தின அனுசரிப்பு நிகழ்வுகளை தாஜ் மஹாலில் நடத்த அனுமதியளித்தது யாா் என இந்திய தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) ஆக்ரா நகர வரலாற்றியலாளா் ராஜ் கிஷோா் ராஜே ஆா்டிஐ மூலம் கேள்வி எழுப்பினாா். அதற்கு முகலாயா் காலத்திலோ, ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்திலோ அல்லது இந்திய அரசோ இதற்கு அனுமதி வழங்கவில்லை என ஏஎஸ்ஐ தெரிவித்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றாா்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மாா்ச் 4-ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com