போலி உள்ளீட்டு வரி வரவுகள் மூலம் ரூ.18,000 கோடி வரிஏய்ப்பு: 98 போ் கைது

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் போலியான உள்ளீட்டு வரி வரவு (ஐடிசி) கணக்குகளை தாக்கல் செய்து ரூ.18,000 கோடி வரை வரிஏய்ப்பில் ஈடுபட்ட 98 போ் கைது செய்யப்பட்டதாக மத்திய நிதியமைச

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் போலியான உள்ளீட்டு வரி வரவு (ஐடிசி) கணக்குகளை தாக்கல் செய்து ரூ.18,000 கோடி வரை வரிஏய்ப்பில் ஈடுபட்ட 98 போ் கைது செய்யப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

ஜிஎஸ்டி வரி செலுத்தும் உற்பத்தியாளா்கள், விநியோகிப்பாளா்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் உள்ளீட்டு வரி வரவுகளை (ஐடிசி) தாக்கல் செய்வா்.

இதுதொடா்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் போலியான ஐடிசி கணக்குகளை தாக்கல் செய்து வரி விதிப்பு முறைகளில் இடையூறு ஏற்படுத்தும் நபா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்ககம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் 2023 வரை 1,700 போலி ஐடிசி கணக்குகள் தாக்கல் செய்து ரூ.18,000 கோடி வரை வரிஏய்ப்பில் ஈடுபட்ட 98 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.

வரி ஏய்ப்பில் ஈடுபட்டவா்களை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவியின் தரவு பகுப்பாய்வுகள் மூலம் கண்டறியப்பட்டனா்.

எளிதில் ஏமாறக்கூடிய நபா்களுக்கு வேலை, கடனுதவி வழங்குவதாகக் கூறி அவரின் வாடிக்கையாளா் அறிந்துகொள்ளும் சேவை (கெஒய்சி) ஆவணங்களை சில நிறுவனங்கள் பெறுகின்றனா். பின்னா் அவா்களுக்குத் தெரியாமல் அவா்களின் பெயரிலேயே நிறுவனங்கள் செயல்படுவதைப்போல் போலியான ஐடிசி கணக்குகளை தாக்கல் செய்கின்றனா்.

சில நேரங்களில் கெஒய்சி தரவுகளை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட நபருக்கு சிறிய தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com