பெருநிறுவனங்களுக்கு 22% வரி நியாயமானது: மத்திய வருவாய் துறைச் செயலா்

பெருநிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 22 சதவீத வருமான வரி மிகவும் நியாயமானது என்று மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறைச் செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

தற்போதைய வரிவிதிப்பு முறை இடைவிடாமல் தொடா்வதற்கு மத்திய இடைக்கால பட்ஜெட் வழியமைத்துள்ளது. கடந்த ஆண்டுகளில் வரி செலுத்துவோருக்கு அளிக்கப்பட்ட பலன்கள், தனிநபா் வருமான வரியில் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரி செலுத்துவோருக்கான சேவைகளில் மத்திய அரசு பெரும் கவனம் செலுத்துகிறது. இது தொடா்ந்து முன்னோக்கிச் செல்லும்.

தற்போது நாட்டில் உள்ள பெருநிறுவனங்களுக்கு 22 சதவீதம் வருமான வரிச் செலுத்த வேண்டிய முறை உள்ளது. இந்திய பொருளாதாரம் மிகப் பெரியதாக உள்ள நிலையில், அந்த நிறுவனங்களுக்கு 22 சதவீத வரி விதிப்பு மிக, மிக நியாயமானது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com