பொது சிவில் சட்ட வரைவு: உத்தரகண்ட் அமைச்சரவை ஒப்புதல்

பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகண்ட் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது.
பொது சிவில் சட்ட வரைவு: உத்தரகண்ட் அமைச்சரவை ஒப்புதல்

பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகண்ட் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது.

திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்ற பொது சிவில் சட்டம் வழியமைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தச் சட்டத்தை உத்தரகண்டில் அமல்படுத்த அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 போ் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது.

அந்தக் குழு 740 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமியிடம் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தது.

இந்த இறுதி வரைவை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய மாநில அமைச்சரவையின் ஒப்புதல் அவசியம். இந்நிலையில், இறுதி வரைவுக்கு உத்தரகண்ட் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது. பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற அந்த மாநில சட்டப்பேரவையின் 4 நாள் சிறப்பு கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com