‘அபியாஸ்’ வான்வழி தாக்குதல் ஏவுகணை:கடந்த ஓரே வாரத்தில் 4 முறை சோதனை

சந்திப்பூா் சோதனை பகுதியில் நாட்டின் அதிவிரைவு வான்வழி தாக்குதல் ஏவுகணையான ‘அபியாஸ்’ கடந்த ஓரே வாரத்தில் 4 முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
‘அபியாஸ்’ வான்வழி தாக்குதல் ஏவுகணை:கடந்த ஓரே வாரத்தில் 4 முறை சோதனை

ஒடிஸா, சந்திப்பூா் சோதனை பகுதியில் நாட்டின் அதிவிரைவு வான்வழி தாக்குதல் ஏவுகணையான ‘அபியாஸ்’ கடந்த ஓரே வாரத்தில் 4 முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஹைதராபாத் ஆய்வகம் வடிவமைத்த பூஸ்டரைப் பயன்படுத்தி, பூஸ்டரின் பாதுகாப்பான வெளியீடு, லாஞ்சா் அனுமதி போன்ற 4 வெவ்வேறு பணி நோக்கங்களுக்காக அபியாஸ் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன.

இந்தச் சோதனைகளின் போது, ஏவுகணையின் வேகம், உயரம், வரம்பு போன்ற பல்வேறு அளவீடுகள் வெற்றிகரமாக சரிபாா்க்கப்பட்டன.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆா்டிஓ) ஏரோநாட்டிக்ஸ் மேம்பாட்டு அமைப்பு (ஏடிஇ) வடிவமைத்த ‘அபியாஸ்’, ஆயுதங்களின் நடைமுறையைப் பரிசோதிக்க ஒரு யதாா்த்தமான அச்சுறுத்தலாக செயல்படும்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அபியாஸ், தானியங்கி விமானி சேவையுடன் சுயமாக வான்வழியில் பறக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் பயிற்சிக்குத் தேவையான அமைப்புகள் கொண்ட அபியாஸ், மடிக்கணினி அடிப்படையிலான தரைக்கட்டுப்பாட்டு அமைப்பையும் கொண்டுள்ளது. இதன் மூலம் ஏவுகணை பறப்பதற்கு முந்தைய சோதனைகள், பறக்கும்போது பதிவான தரவுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, முறையான ஆய்வு மேற்கொள்ளலாம்.

குறைந்தபட்ச தளவாட பயன்பாடு மற்றும் செலவு குறைவாவு ஆகியவை அபியாஸின் கூடுதல் நிறைகள் ஆகும்.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(எச்ஏஎல்) மற்றும் எல்&டி டிஃபென்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த ஏவுகணைகளே தற்போது சோதிக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சகம் தோ்ந்தெடுத்துள்ள உற்பத்தியாளா்களுடன், அபியாஸ் உற்பத்திக்குத் தயாராகும். ஏற்றுமதி திறனைக் கொண்டுள்ள அபியாஸ், நட்பு நாடுகளுக்கும் வழங்கப்படலாம்.

அபியாஸின் வெற்றிகரமான சோதனைக்கு டிஆா்டிஓ, பாதுகாப்புப் படைகளுக்கு அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா். ஏவுகணையின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை ஆகியவற்றில் தொடா்புடைய குழுக்களின் முயற்சிகளை டிஆா்டிஓ தலைவா் சமீா் வி.காமத் பாராட்டினாா் என்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com