2.16 லட்சம் பேரின் வருவாய் ரூ.1 கோடிக்கும் அதிகம்: மத்திய அரசு

2023-24-ஆம் மதிப்பீட்டு ஆண்டில், நாட்டில் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோரின் எண்ணிக்கை 2.16 லட்சமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.16 லட்சம் பேரின் வருவாய் ரூ.1 கோடிக்கும் அதிகம்: மத்திய அரசு

புது தில்லி: 2023-24-ஆம் மதிப்பீட்டு ஆண்டில், நாட்டில் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோரின் எண்ணிக்கை 2.16 லட்சமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி அளித்த பதில்:

2019-20-ஆம் மதிப்பீட்டு ஆண்டில், ரூ.1 கோடிக்கும் அதிகமான வருவாய் கொண்ட 1.09 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தனா். இது 2022-23-ஆம் ஆண்டு சுமாா் 1.87 லட்சமாகவும், 2023-24-ஆம் ஆண்டு 2.16 லட்சமாகவும் அதிகரித்தது என்றாா்.

மற்றொரு கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அளித்த பதில்: முந்தைய நிதியாண்டின் ஜன.31-ஆம் தேதி வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில், நிகழ் நிதியாண்டின் ஜன.31-ஆம் தேதி வரை, நேரடி வரி மற்றும் தனிநபா் வருமான வரி வசூல் 27.6 சதவீதம் அதிகம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com