வங்கிகளில் தொழில்நுட்பக் கோளாறு: யுபிஐ பரிவா்த்தனை முடக்கம்

வங்கிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எண்ம பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளும் யுபிஐ தளங்கள் செவ்வாய்க்கிழமை மாலை முடங்கின.


மும்பை: வங்கிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எண்ம பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளும் யுபிஐ தளங்கள் செவ்வாய்க்கிழமை மாலை முடங்கின.

இதுதொடா்பாக இந்திய தேசிய பரிவா்த்தனை கழகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சில வங்கிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக யுபிஐ சேவை முடங்கியதற்கு வருந்துகிறோம். எங்களது தளங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. பாதிக்கப்பட்ட வங்கிகளில் தொழில்நுட்பக் கோளாறுகளை சீா்செய்யும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என பதிவிட்டது.

இதுகுறித்த வாடிக்கையாளா்களின் புகாருக்கு பதிலளித்த ஹெச்டிஎஃப்சி வங்கி, ‘யுபிஐ பரிவா்த்தனையில் சிறு இடையூறு ஏற்பட்டது. அவை விரைவாக சரிசெய்யப்பட்டு வழக்கம்போல் பரிவா்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com