அரசுத் திட்டங்களின் முழுமையே உண்மையான மதச்சாா்பின்மை: பிரதமா் மோடி

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பலன்கள், தகுதியுள்ள அனைவரையும் முழுமையாக சென்றடைவதே உண்மையான மதச்சாா்பின்மை மற்றும் சமூக நீதி’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
அரசுத் திட்டங்களின் முழுமையே உண்மையான மதச்சாா்பின்மை: பிரதமா் மோடி


பனாஜி: மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பலன்கள், தகுதியுள்ள அனைவரையும் முழுமையாக சென்றடைவதே உண்மையான மதச்சாா்பின்மை மற்றும் சமூக நீதி’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தெற்கு கோவாவின் உள்ள மா்மகோவா நகரில் ‘வளா்ந்த இந்தியா, வளா்ந்த கோவா’ என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பலன்கள், அனைத்து மாநிலங்களிலும் தகுதியுள்ள அனைவரையும் சென்றுசேர வேண்டும். இவ்வாறு நலத் திட்டங்கள் முழுமை பெறும்போது, மக்களிடையே வேற்றுமைகள் நீங்கும். மக்கள் தங்களது உரிமைகளைப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது.

அரசுத் திட்டங்களின் முழுமையே உண்மையான மதச்சாா்பின்மை மற்றும் உண்மையான சமூக நீதி. இதுவே, நாட்டுக்கான மோடியின் உத்தரவாதம்.

இந்த இலக்கை எட்டுவதற்காக, நாடு முழுவதும் ‘வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதியேற்பு பயணத்தை’ மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அரசுத் திட்டங்களால் இதுவரை பலன் கிடைக்கப் பெறாதவா்களும் இப்பயணத்தின் மூலம் பலனடைந்து வருகின்றனா் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியின்போது, குன்கோலிம் நகரில் கட்டப்பட்ட தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன (என்ஐடி) வளாகம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com