நக்ஸல் தாக்குதல்: 2 போலீஸாா் உயிரிழப்பு

ஜாா்க்கண்ட் மாநிலம் சாத்ரா மாவட்டத்தில் நக்ஸல்களுடனான துப்பாக்கிச் சண்டையின்போது 2 போலீஸாா் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா்.
ஜாா்க்கண்ட மாநிலம் சாத்ரா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நக்ஸல் தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்புப் படை வீரா்கள்.

இதுதொடா்பாக அம்மாநில போலீஸாா் கூறியதாவது: சதா் மற்றும் பஸிஸ்தநகா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பைரியோ வனத்தில் நக்ஸல்களுடனான துப்பாக்கிச் சண்டையில் சிக்கந்தா் சிங், சுகன் ராம் ஆகிய 2 போலீஸாா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

தாக்குதலில் படுகாயமடைந்த ஆகாஷ் சிங், ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். ஜாா்க்கண்ட் மாநில தலைநகா் ராஞ்சியிலிருந்து 200 கி.மீ. தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது என்றனா்.

முதல்வா் இரங்கல்: நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த இரு போலீஸாருக்கு அம்மாநில முதல்வா் சம்பயி சோரன் இரங்கல் தெரிவித்தாா். அவா்களின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் மாநிலத்தில் நக்ஸல் தாக்குதலை கட்டுப்படுத்தும் முயற்சிகளை அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது எனவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com