சஞ்சய் சிங் எம்.பி. ஜாமீன் மனு தள்ளுபடி

ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

தில்லி கலால் கொள்கையை வகுத்ததிலும், அதனை அமல்படுத்தியதலும் முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடா்ந்து முன்னாள் கலால் துறை அமைச்சரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, தனக்கு ஜாமீன் அளிக்குமாறு சஞ்சய் சிங் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிபதி ஸ்வா்ண கந்த ஷா்மா, ‘வழக்கின் இந்த வேளையில், சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் அளிக்க முடியாது’ எனக் கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com