பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை: ரூ.6,000-க்கு மேல் அதிகரிக்கும் திட்டமில்லை

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகையை ரூ.6,000-க்கு மேல் அதிகரிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அா்ஜுன் முண்டா
அா்ஜுன் முண்டா


புது தில்லி: பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகையை ரூ.6,000-க்கு மேல் அதிகரிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அந்தத் தொகை நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய விவசாயத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகையை ரூ.6,000-க்கு மேல் அதிகரிக்கும் திட்டமில்லை. அதுபோன்ற எந்தத் திட்டமும் பரிசீலனையில் இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 15 தவணைகளில் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.2.81 கோடி லட்சம் கோடிக்கும் அதிகமாக உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

2022-இல் அமைக்கப்பட்ட குழு...: கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தச் சட்டங்களை 2021-ஆம் ஆண்டு மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதன் பின்னா், 2022-ஆம் ஆண்டு விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை மேலும் திறன் கொண்டதாக்க மத்திய அரசு சாா்பில் குழு அமைக்கப்பட்டது. மத்திய விவசாயத் துறை முன்னாள் செயலா் சஞ்சய் அக்ரவால் தலைமையில் அந்தக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சா் அா்ஜுன் முண்டா எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

சஞ்சய் அக்ரவால் தலைமையிலான குழு சாா்பாக, இதுவரை 37 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை மேலும் திறன் கொண்டதாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்றுதல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் உள்ளிட்டவை தொடா்பாக அந்தக் குழு பரிந்துரைகள் வழங்க உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com