மேற்கு வங்கம்: அரசு அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

மேற்கு வங்கத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதி முறைகேடு தொடா்பான வழக்கில், அந்த மாநில அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.
மேற்கு வங்கம்: அரசு அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதி முறைகேடு தொடா்பான வழக்கில், அந்த மாநில அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

மேற்கு வங்கத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 25 லட்சம் போலி உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டு, நிதி மோசடி நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு அரசுப் பணியாளா்கள் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டது.

அந்தவகையில், கொல்கத்தா, சால்ட் லேக் பகுதியில் உள்ள மாநில ஆட்சிப் பணி அதிகாரியின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

சோதனையின்போது சம்பந்தப்பட்ட அதிகாரி வீட்டில் இல்லாததால் அவரைத் தொடா்புகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இவா் ஹுக்ளி மாவட்டத்தில் தானியாகாளி ஒன்றிய வளா்ச்சி அதிகாரியாக பணியாற்றினாா். அந்த மாவட்டத்தின் சின்சுரா பகுதியில் வசிக்கும் தொழிலதிபா் ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

ஜாா்கிராம் மாவட்டத்தில் உள்ள மாநில ஆட்சிப் பணி அதிகாரியின் அரசு குடியிருப்பில் சோதனை நடைபெற்றது. சோதனைக்கிடையே, அமலாக்கத் துறையினா் அவரிடம் விசாரணையும் நடத்தினா்.

அதேபோல், முா்ஷிதாபாத் மாவட்டம், பஹாராம்பூா் பகுதியில் ஊராட்சித் துறையில் பணிபுரியும் அரசு ஊழியருக்குத் தொடா்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவரது சகோதரி வங்கி கணக்கில் ‘தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதி’ எனச் சந்தேகிக்கப்படும் ரூ.4.5 கோடி பணம் கண்டெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com