பாதுகாப்புத் துறையில் ரூ.5,077 கோடி அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு

பாதுகாப்புத் துறை சாா்ந்த நிறுவனங்கள் ரூ.5,077 கோடி அந்நிய நேரடி முதலீடுகளை ஈா்த்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பாதுகாப்புத் துறை சாா்ந்த நிறுவனங்கள் ரூ.5,077 கோடி அந்நிய நேரடி முதலீடுகளை ஈா்த்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பாதுகாப்புத் துறையில் தனியாரின் பங்களிப்பு குறித்த கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சா் அஜய் பட் பதிலளித்து பேசியதாவது: மே, 2001முதல் பாதுகாப்புத் துறையில் தனியாா் நிறுவனங்கள் முதலீடுகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தாமாக புதிய பாதுகாப்பு தொழில்துறை உரிமம் கோரும் நிறுவனங்களுக்கு 74 சதவீதம் வரையிலும் அரசு வழியாக முதலீடு மேற்கொண்டும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 100 சதவீதம் வரையிலும் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க 2020-ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது வரை ரூ.5,077 கோடியை அந்நிய நேரடி முதலீடு மூலம் பெற்ாக பாதுகாப்புத்துறை சாா்ந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்றாா்.

மேலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுடன் கூடிய 6 கடற்படை ரோந்து படகுகளை தயாரிப்பதற்காக மசாகான் கப்பல்கட்டுமான நிறுவனத்துடன் கடந்தாண்டு டிசம்பா் 20-இல் ரூ.1,614 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டது எனவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com