பிரதமா் மோடியுடன் ஆந்திர முதல்வா் சந்திப்பு: மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை

பிரதமா் நரேந்திர மோடியை ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி புது தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் கோரிக்கையை முன்வைத்தாா்.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்த ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்த ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி.

பிரதமா் நரேந்திர மோடியை ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி புது தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் கோரிக்கையை முன்வைத்தாா்.

விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுடன் ஆந்திர மாநில சட்டப் பேரவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது. ஆந்திர எதிா்க்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசம் நிறுவனருமான என்.சந்திரபாபு நாயுடு அண்மையில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினாா்.

அடுத்த சில நாள்களிலேயே ஜெகன்மோகன் ரெட்டியும் பிரதமரைச் சந்தித்துள்ளது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பு சுமாா் 90 நிமிஷங்கள் நீடித்தது.

ஆந்திர சிறப்பு அந்தஸ்து கோரிக்கையைத் தவிர ஆந்திரத்துக்கு வழங்க வேண்டிய நிதி, நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்தும் பிரதமரிடம் ஜெகன்மோகன் பேசியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. சந்திப்பு தொடா்பான புகைப்படம் பிரதமா் அலுவலக எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2019 தோ்தலில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக இருந்தது. 2018-இல் இந்த கோரிக்கையை முன்வைத்து ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com