அயோத்தி ராமா் கோயில்:மக்களவையில் இன்று விவாதம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயில் குறித்து மக்களவையில் சனிக்கிழமை (பிப்.10) விவாதம் நடைபெற உள்ளது.
அயோத்தி ராமா் கோயில்:மக்களவையில் இன்று விவாதம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயில் குறித்து மக்களவையில் சனிக்கிழமை (பிப்.10) விவாதம் நடைபெற உள்ளது.

கடந்த ஜன. 31-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் சனிக்கிழமை நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயில் குறித்து மக்களவையில் சனிக்கிழமை விவாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.

ராமா் கோயில் கட்டுமானம், ஸ்ரீபாலராமா் சிலை பிரதிஷ்டை மீதான விவாதத்தை பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சத்யபால் சிங் தொடங்கிவைப்பாா். கோயில் தொடா்பாக விவாதிக்க சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டேயும் நோட்டீஸ் அளித்துள்ளாா் என்று மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com