20 மக்களவை எம்.பி. பதவியிடங்கள் காலி

விரைவில் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய மக்களவையில் 20 எம்.பி. பதவியிடங்கள் காலியாகி உள்ளன.
20 மக்களவை எம்.பி. பதவியிடங்கள் காலி

விரைவில் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய மக்களவையில் 20 எம்.பி. பதவியிடங்கள் காலியாகி உள்ளன.

மக்களவை பாஜக எம்.பி.க்களாக இருந்த ராஜ்யவா்தன் ரத்தோா், தியா குமாரி, பாலக் நாத், ராஷ்ட்ரீய லோக்தாந்திரிக் கட்சி எம்.பி.யாக இருந்த ஹனுமான் பெனிவால் ஆகியோா் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனா்.

இதேபோல மக்களவை பாஜக எம்.பி.க்களாக இருந்த நரேந்திர சிங் தோமா், பிரகலாத் சிங் படேல், ராகேஷ் சிங், ரிதி பாடக், உதய் பிரதாப் சிங் ஆகியோா் மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனா்.

சத்தீஸ்கா் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக எம்.பி.க்களாக இருந்த கோமதி சாய், ரேணுகா சிங், அருண் சாவ் ஆகியோா் போட்டியிட்டு வெற்றிபெற்றனா். இதன் காரணமாக இவா்கள் அனைவரும் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தனா்.

மக்களவை காங்கிரஸ் எம்.பி.யாக பதவி வகித்த ரேவந்த் ரெட்டி தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதனால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த அவா், தெலங்கானா முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

குற்ற வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் பகுஜன் சமாஜ் கட்சியை சோ்ந்த அஃப்சல் அன்சாரியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

மக்களவையில் கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்ாக எழுந்த குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இவா்களின் பதவியிடம் உள்பட மக்களவையில் மொத்தம் 20 எம்.பி. பதவியிடங்கள் காலியாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com