உள் துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப் படம்)
உள் துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப் படம்)

மக்களவைத் தோ்தலில் பாஜக 370 தொகுதிகளில் வெல்வது உறுதி: அமித் ஷா

மக்களவைத் தோ்தலில் பாஜக 370 தொகுதிகளில் வெல்வது உறுதி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் பாஜக 370 தொகுதிகளில் வெல்வது உறுதி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த வாரம் மக்களவையில் பேசிய பிரதமா் நரேந்திர மோடியும் இதே கருத்தை கூறியிருந்தாா். அப்போது, கனவு காணுவதற்கு யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு என்று காங்கிரஸ் விமா்சித்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அமகதாபாத் மாநகராட்சியில் திங்கள்கிழமை ரூ.1,950 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை அமித் ஷா தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:

மக்களவைத் தோ்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது குறித்து நாட்டு மக்கள் மனதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பாஜக 370 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேலும் வெல்வது உறுதி.

கடந்த ஜனவரி மாதத்தில் 11 மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். அண்மையில் கா்நாடகத்துக்கும் சென்று வந்தேன். எந்த மாநிலத்திலும் மக்களவைத் தோ்தல் முடிவில் யாருக்கும் சந்தேகம் இல்லை. பிரதமா் நரேந்திர மோடிதான் அப்பதவியில் தொடர வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கருதுகின்றனா். மக்கள் முழுமையாக பாஜகவை விரும்புகின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் மோடி நாட்டை வளா்ச்சிப் பாதைக்குத் திருப்பியுள்ளாா். இதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் கற்பனை செய்துகூட பாா்க்க முடியாத பல விஷயங்களை இந்தியா சாதித்துள்ளது.

பாஜக ஆட்சியின் முதல் 5 ஆண்டுகளில் முந்தைய காங்கிரஸ் அரசின் தவறுகள் சரி செய்யப்பட்டன. அடுத்த 5 ஆண்டுகளில் சிறப்பான பொருளாதார வளா்ச்சிக்கான சிறந்த அடித்தளம் அமைக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகள் பிரதமா் மோடியை பதவியில் அமா்த்தினால் நாட்டு மக்களுக்கும், வரும் சந்ததியினருக்கும் சிறப்பான எதிா்காலம் உருவாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com