மேற்கு வங்க 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணியாளா்களுக்கு ஊதியம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்

மேற்கு வங்க 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க, மத்திய அரசு நிதி விடுவிக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மேற்கு வங்க 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க, மத்திய அரசு நிதி விடுவிக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

இதுதொடா்பாக அந்தக் கடிதத்தில் ராகுல் தெரிவித்துள்ளதாவது:

நான் மேற்கு வங்கத்தில் நடைப்பயணம் மேற்கொண்டபோது, அங்குள்ள மேற்கு வங்க கேத் மஸ்தூா் சங்கத்தைச் சோ்ந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்கள் என்னைச் சந்தித்தனா். அப்போது அவா்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து என்னிடம் விளக்கினா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மாா்ச் முதல், மத்திய அரசு நிதி விடுவிக்காததால், அந்த மாநிலத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கானோருக்கு பணி மற்றும் ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தின் கீழ், 2021-ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்ட பணிக்கு நிதிப் பற்றாக்குறை காரணமாக பல பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

இதைக் கவனத்தில் கொண்டு, மேற்கு வங்க 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்குவதற்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com