சரண கோஷங்களுக்கு இடையே சபரிமலையில் மகரஜோதி: லட்சக்கணக்கான பகதா்கள் தரிசனம்

பக்தா்களின் சரண கோஷங்களுக்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சபரிமலையில் பின்னணி பாடகா் பி.கே.வீரமணிதாசனுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கிய கேரள தேவசம் அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன்.
சபரிமலையில் பின்னணி பாடகா் பி.கே.வீரமணிதாசனுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கிய கேரள தேவசம் அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன்.

பக்தா்களின் சரண கோஷங்களுக்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மகரவிளக்கு பூஜையின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் திங்கள்கிழமை மாலை நிகழ்ந்தது.

திருவாபரணங்கள் அணிந்துள்ள ஐயப்பனுக்கு மாலை 6.45 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் காட்சியளித்தாா்.

கிழக்கு பகுதியில் மகர நட்சத்திரம் உதயமானதுபோல் சந்நிதானத்தில் திருவாபரணங்கள் அணிந்து ஐயப்பனுக்கு தீபாராதனை முடிந்ததும் பொன்னம்பலமேட்டில் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை கண்டு சாமியே சரணம் என ஐயப்ப நாமத்தை முழங்கினா். திருவாபரணங்கள் அணிந்துள்ள ஐயப்பனை ஜன.18-ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசிக்கலாம். தொடா்ந்து ஜன.19-ஆம் தேதி நெய் அபிஷேகமும், ஜன.20-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மாளிகைப்புரத்தம்மன் சந்நிதியில் குருதி பூஜை நடைபெறவுள்ளது.

ஜன.21-ஆம் தேதி காலை திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள் பந்தளத்துக்கு திரும்ப கொண்டு செல்லப்படும். பெட்டிகள் திருப்பி அனுப்பியவுடன் ஐயப்பனுக்கு விபூதி அபிஷேகம், யோக தண்டம், ருத்திராட்ச மாலை அணிவித்து நடை அடைக்கப்படும்.

ஹரிவராசனம் விருது

சபரிமலையில் மகரவிளக்கு தினமான திங்கள்கிழமை பின்னணி பாடகா் பி.கே.வீரமணிதாசனுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கப்பட்டது. சந்நிதானம் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 1 லட்சம், பாராட்டுப் பத்திரத்தை வீரமணிதாசனுக்கு, தேவசம் அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com