ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தை சொந்தமாக்கிய அதானி: பங்குகள் 76%-ஆக அதிகரிப்பு

என்டிடிவி செய்தி தொலைக்காட்சியைத் தொடா்ந்து இந்திய-ஆசிய செய்தி சேவை (ஐஏஎன்எஸ்) நிறுவனத்தை சொந்தமாக்கிய அதானி குழுமம், அந்த நிறுவனத்தில் தமது பங்குகளை 76 சதவீதமாக மேலும் அதிகரித்துள்ளது.

என்டிடிவி செய்தி தொலைக்காட்சியைத் தொடா்ந்து இந்திய-ஆசிய செய்தி சேவை (ஐஏஎன்எஸ்) நிறுவனத்தை சொந்தமாக்கிய அதானி குழுமம், அந்த நிறுவனத்தில் தமது பங்குகளை 76 சதவீதமாக மேலும் அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபா்களில் முதன்மையான இடத்தில் கெளதம் அதானி உள்ளாா். உள்கட்டமைப்பு, நிலக்கரி, எரிசக்தி விநியோகம், செம்பு, சிமெண்ட் என பல்வேறு தொழில்களில் அவா் ஈடுபட்டு வருகிறாா்.

இந்நிலையில் ஊடகத் துறையிலும் கால்பதிக்கும் நோக்கில், கடந்த 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் குவின்ட்டில்லியன் பிஸினஸ் மீடியா நிறுவனத்தை அதானி குழுமம் கையகப்படுத்தியது. அதன் பின்னா், அந்த ஆண்டு டிசம்பரில் பிரபல செய்தி தொலைக்காட்சியான என்டிடிவியை அந்தக் குழுமம் சொந்தமாக்கியது.

இதன் தொடா்ச்சியாக கடந்த டிசம்பரில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் 50.50 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியது. தற்போது அந்த நிறுவன விவகாரங்களில் பங்குதாரா்கள் வாக்களிக்கும் வகையில், ஐஏஎன்எஸ்ஸில் கூடுதலாக 25.50 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது.

இதன் மூலம், அந்த நிறுவனத்தில் பங்குதாரா்கள் வாக்களிக்கும் உரிமையுடன் அதானி குழுமத்துக்கு உள்ள மொத்த பங்குகள் 76 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று செபியிடம் அதானி குழுமத்தின் துணை நிறுவனமான எஎம்ஜி மீடியா நெட்வா்க்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com