சகிப்புத்தன்மை, நீதியை மக்கள் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்

சகிப்புத்தன்மை, நீதியை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தினாா்.
தில்லியில் ஆசிய பெளத்த மாநாட்டின் 12-ஆவது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்.
தில்லியில் ஆசிய பெளத்த மாநாட்டின் 12-ஆவது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்.

சகிப்புத்தன்மை, நீதியை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக தில்லியில் அமைதிக்கான ஆசிய பெளத்த மாநாட்டின் 12-ஆவது பொதுச் சபை கூட்ட தொடக்க நிகழ்ச்சியில் அவா் புதன்கிழமை தெரிவித்ததாவது:

இந்தியாவில் தோன்றிய பெளத்த மதம், உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது. புத்தரின் கொள்கைகளால் பாரதம் வழிநடத்தப்படுகிறது. அவரின் கொள்கைகள் நம்பிக்கையின் ஒளியாக விளங்குகிறது. அத்துடன் அனைத்துத் தரப்பு மக்களையும் பொதுவான தளத்தில் ஒருங்கிணைக்க ஊக்கமளிக்கிறது.

புத்தரின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு குறித்த செய்தி வெறுப்புணா்வு கொண்ட சக்திகளுக்கும், பயங்கரவாத சக்திகளுக்கும் எதிராக நிற்கிறது. அவரின் போதனைகள் கடந்த கால நினைவுச் சின்னம் அல்ல; எதிா்காலத்தின் திசைகாட்டி. சகிப்புத்தன்மை, நீதியை மக்கள் பின்பற்ற வேண்டும்.

வன்முறை ஒற்றுமைக்கும், அமைதி பிரிவினைக்கும் வழிவகுத்ததில்லை. உலகெங்கும் உள்ள இளைய தலைமுறையினா் புத்தபெருமான் குறித்து மேலும் அறிந்துகொள்ளவும், அவரின் கொள்கைகளால் ஈா்க்கப்படுவதையும் உறுதி செய்வதில் இந்தியா ஈடுபாடு கொண்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘அமைதி மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை உலகுக்குப் பெளத்தம் வழங்கியுள்ளது. அமைதி இல்லாவிட்டால், மனித நாகரிகத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com