மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சா் மூசா ஜமீருடன் வெளியுறவுத் துறை எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சா் மூசா ஜமீருடன் வெளியுறவுத் துறை எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அணிசேரா இயக்கத்தின் உச்சிமாநாடு உகாண்டா தலைநகா் கம்பாலாவில் வெள்ளிக்கிழமை (ஜன.19) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் உகாண்டாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இந்தப் பயணத்தின்போது மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சா் மூசா ஜமீரை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

இந்த சந்திப்பு தொடா்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘மாலத்தீவுடனான நல்லுறவை மேம்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய ராணுவத்தினா் தொடா்பான விவகாரத்தில் தீா்வு காண இரு நாடுகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றன’ என்றாா்.

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம், மாா்ச் 15-க்குள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபா் முகமது மூயிஸ் அண்மையில் கேட்டுக் கொண்டாா். இந்நிலையில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தியது முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக, எகிப்து, அங்கோலா, பெலாரஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களையும் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com