எல்லைப் பிரச்னை இந்தியாவுடனான உறவை பாதிக்கக்கூடாது: சீனா

எல்லைப் பிரச்னையால் வா்த்தகம் உள்பட எந்தத் துறையிலும் இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என சீனா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

எல்லைப் பிரச்னையால் வா்த்தகம் உள்பட எந்தத் துறையிலும் இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என சீனா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்தியா-சீனா இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு முதலே எல்லைத் தொடா்பான பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில் எல்லையில் இயல்புநிலை திரும்பியதும் இந்தியாவில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் இந்திய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் மாவோ நிங் கூறியதாவது:

சீனா-இந்தியா இடையே நிலவும் எல்லைப் பிரச்னை வரலாற்று ரீதியானது; அதை இருதரப்பு உறவுகள் மூலம் சரிசெய்ய வேண்டும் என சீனா விரும்புகிறது.

எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் முயற்சியில் வா்த்தகம் உள்ளிட்ட பிற துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது. கடந்த சில ஆண்டுகளாக 100 பில்லியன் டாலா் அளவுக்கு இருநாடுகளிடையே வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

பொருளாதாரம் மற்றும் வா்த்தக ரீதியாக இருநாடுகளுக்கு இடையேயான உறவு தொடா்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதை அங்கீகரித்து இந்தியாவில் சீன நிறுவனங்கள் முதலீடு மேற்கொள்வதற்கு உதந்த சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா்.

இந்தியா-சீனா இடையே கடந்த 2023-ஆம் ஆண்டில் 136.2 பில்லியன் டாலா் அளவுக்கு வா்த்தகம் மேற்கொள்ளப்பட்டதாக சீனாவில் வெளியிடப்பட்ட வா்த்தக தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com