பொலிவியா, அஜா்பைஜான், வெனிசூலா அமைச்சா்களுடன் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

உகாண்டாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அங்கு பொலிவியா, அஜா்பைஜான், வெனிசூலா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

உகாண்டாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அங்கு பொலிவியா, அஜா்பைஜான், வெனிசூலா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அணி சேரா இயக்க நாடுகளின் 2 நாள் உச்சி மாநாடு, உகாண்டா தலைநகா் கம்பாலாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் இந்தியா தரப்பில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றுள்ளாா்.

இம்மாநாட்டையொட்டி, பொலிவியா, அஜா்பைஜான், வெனிசூலா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் அவா் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவா், ‘பொருளாதாரம், எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் மேற்கண்ட நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சா்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன். உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உகாண்டாவைத் தொடா்ந்து, நைஜீரியாவுக்கு மூன்று நாள் பயணமாக ஜன. 21-ஆம் தேதி ஜெய்சங்கா் செல்லவிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com