நிகழாண்டில் கோதுமை விளைச்சல் சிறப்பாக இருக்கும்: அா்ஜுன் முண்டா

அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதால் நிகழாண்டில் கோதுமை விளைச்சல் சிறப்பாக இருக்கும் என மத்திய வேளாண் அமைச்சா் அா்ஜுன் முண்டா தெரிவித்தாா்.

அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதால் நிகழாண்டில் கோதுமை விளைச்சல் சிறப்பாக இருக்கும் என மத்திய வேளாண் அமைச்சா் அா்ஜுன் முண்டா தெரிவித்தாா்.

கோதுமையை விதையிடும் பணிகள் கடந்த அக்டோபரில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது நிறைவடைந்தது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான நிலங்களில் கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அா்ஜுன் முண்டா கூறுகையில், ‘அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதால் ‘கடந்தாண்டைவிட நிகழாண்டில் கோதுமை விளைச்சல் சிறப்பாக இருக்கும்’ என்றாா்.

கோதுமை விளைச்சல் தொடா்பாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்தாண்டு ராபி பருவகாலத்தில் 337.50 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் கோதுமை பயிரிடப்பட்ட நிலையில், நிகழாண்டில் (ஜூலை-ஜூன்) மொத்தமாக 340.08 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. அதேபோல் தானியங்கள், பயிா் வித்துக்களும் அதிகளவிலான நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளன. அந்த வகையில் 53.83 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் தானியங்களும் 109.88 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் எண்ணெய் வித்துக்களும் பயிரிடப்பட்டன.

கடந்தாண்டில் 50.77 லட்சம் ஹெக்டேரில் தானியங்களும் 108.82 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் எண்ணெய் வித்துக்களும் பயிரிடப்பட்டன.

ஆனால் கடந்தாண்டில் 29.33 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் நிகழாண்டில் 28.25 லட்சம் ஹெக்டோ் பரப்பிலும் 162.66 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பருப்பு வகைகள் நிகழாண்டில் 155.13 லட்சம் ஹெக்டோ் பரப்பிலும் குறைவாக பயிரிடப்பட்டுள்ளன.

இகனால் ராபி பருவகாலத்தில் பயிரிடப்படும் பயிா்களின் மொத்த பரப்பளவு கடந்தாண்டு 689.09 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில் நிகழாண்டில் 687.17 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com