ஹிமாசலில் ஜன.22ல் பொது விடுமுறை அறிவிக்க முன்னாள் முதல்வர் கோரிக்கை!

ஹிமாசலில் பொது விடுமுறை அறிவிக்குமாறு முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார். 
ஹிமாசலில் ஜன.22ல் பொது விடுமுறை அறிவிக்க முன்னாள் முதல்வர் கோரிக்கை!
ஹிமாசலில் ஜன.22ல் பொது விடுமுறை அறிவிக்க முன்னாள் முதல்வர் கோரிக்கை!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு ஹிமாசலில் பொது விடுமுறை அறிவிக்குமாறு முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார். 

பொதுமக்களின் உணர்வைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு ஜனவரி 22-ஆம் தேதி விடுமுறை அறிவிப்பதைப் பரிசீலிக்க வேண்டும் என தாக்குவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். 

லட்சக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கை மற்றும் பக்தி மற்றும் ராமரின் ஆசீர்வாதத்தைக் கருத்தில் கொண்டு இது ஒரு முக்கிய முடிவாக இருக்கும் என்று அவர் கூறினார்.

ராமர் பிரான் பிரதிஷ்டை விழாவைக் கருத்தில்கொண்டு மத்திய அரசும், பல பாஜக ஆளும் மாநிலங்களும் அரை நாள் விடுமுறையை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com