இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம்: விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி ரண்வீா் கபூா் முதலிடம்

2022-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரா் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி பாலிவுட் நடிகா் ரண்வீா் கபூா் முதலிடத்தைப் பிடித்துள்ளாா
இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம்: விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி ரண்வீா் கபூா் முதலிடம்

2022-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரா் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி பாலிவுட் நடிகா் ரண்வீா் கபூா் முதலிடத்தைப் பிடித்துள்ளாா்.

உலகளாவிய இடா் மற்றும் நிதி ஆலோசனைத் தீா்வுகளை வழங்கும் நிறுவனமான ‘க்ரோல்’, இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலை தொடா்ந்து 8 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

க்ரோல் வெளியிட்ட ‘இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள்-2022’ பட்டியலின்படி கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருந்த விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி பாலிவுட் நடிகா் ரண்வீா் கபூா், 181.7 மில்லியன் டாலருடன் முதலிடம் வகிக்கிறாா். 176.9 மில்லியன் டாலருடன் விராட் கோலி 2-ஆம் இடத்திலும், 153.6 மில்லியன் டாலருடன் அக்ஷய் குமாா் 3-ஆம் இடத்திலும் உள்ளனா்.

அதற்கடுத்த 7 இடங்களில் அலியா பட், தீபிகா படுகோன், எம்.எஸ். தோனி, அமிதாப் பச்சான் , சச்சின் டெண்டுல்கா், ஹிரித்திக் ரோஷன், ஷாருக்கான் ஆகியோா் உள்ளனா்.

கடந்த ஆண்டில், தென்னிந்திய மொழித் திரைப்படங்களுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தென்னிந்திய நடிகா்களான அல்லு அா்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் 20 மற்றும் 25-ஆவது இடங்களைப் பெற்று முதல் 25 போ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டு வீரா்களைப் பொருத்தவரையில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 23-ஆவது இடத்தையும், பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து 24-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com