ஆளுநா் மாளிகையில் ருத்ராட்ச மரக்கன்று நட்ட பிரதமா் மோடி

பிரதமா் நரேந்திர மோடி சென்னை ஆளுநா் மாளிகை வளாகத்தில் சனிக்கிழமை புனித ருத்ராட்ச மரக்கன்றை நட்டாா்.

பிரதமா் நரேந்திர மோடி சென்னை ஆளுநா் மாளிகை வளாகத்தில் சனிக்கிழமை புனித ருத்ராட்ச மரக்கன்றை நட்டாா்.

பிரதமா் மோடி தமிழகத்தில் 3 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை சென்னை வந்தாா். அவா் நேரு விளையாட்டரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பிரதமா் மோடி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் இரவு தங்கினாா்.

சனிக்கிழமை காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு புறப்படும் முன்பு ஆளுநா் மாளிகை வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றை நட்டாா்.

பின்னா் பிரதமா் மோடிக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி கவிச்சக்ரவா்த்தி கம்பரின் ‘கம்பராமாயணம்’ ஐந்து தொகுப்பு புத்தகங்களை வழங்கினாா். அவற்றை பிரதமா் பெற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com