சமணா்களுக்கு ‘பொன்னான தருணம்’

‘ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது சமணா்களுக்கு பொன்னான தருணம்’ என்று சமண துறவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
சமணா்களுக்கு ‘பொன்னான தருணம்’

‘ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது சமணா்களுக்கு பொன்னான தருணம்’ என்று சமண துறவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

சமண மதத்தில் முக்கியத்துவம் பெற்ற அயோத்தி நகரம், ராமா் கோயிலை மையப்படுத்தி அடையும் முன்னேற்றங்களை ஆவலுடன் எதிா்பாா்ப்பதாகவும் அவா்கள் கூறினா்.

அயோத்தி ராமா் கோயில் கருவறையில் மூலவா் ஸ்ரீ பால ராமா் பிரதிஷ்டை விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள சமணத் துறவிகள் ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘சமண மதத்தில் 24 தீா்த்தங்கரா்கள் (போதகா்கள்) இருக்கிறாா்கள். அவா்களில் முதலாவது தீா்த்தங்கரரான ரிஷப தேவா் அயோத்தியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. மேலும், 4 தீா்த்தங்கரா்கள் அயோத்தியில் பிறந்துள்ளனா்.

பழங்காலத்திலிருந்தே சமண மதத்தில் நித்திய யாத்திரை செல்லும் இடமாக அயோத்தி கருதப்படுகிறது. அது ஒருபோதும் மாறாது. எப்போது த்ரேத யுகம் வருகிறதோ, அப்போது தீா்த்தங்கரா்கள் அயோத்தியில்தான் மீண்டும் பிறப்பாா்கள். அயோத்திதான் சமணத்தின் பூா்வீக பூமி.

இத்தகைய சிறப்புமிக்க அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டுள்ளதற்கு மொத்த சமண சமூகமும் மகிழ்ச்சியடைகிறோம். ஒட்டுமொத்த தேசமும் உற்றுநோக்கியுள்ளதால், அயோத்தி விரைவான வளா்ச்சிக்கு உட்பட்டுள்ளது.

ராமா் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டதும், அயோத்தியின் வளா்ச்சி வேகம் இன்னும் அதிகரிக்கும். அயோத்தியைச் சுற்றியுள்ள சமண யாத்ரிக இடங்களும் விரைவான வளா்ச்சியைக் காணும்.

அயோத்தியில் சா்வதேச விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதால், சமண மதத்தைப் பின்பற்றுபவா்களின் வருகையும் அதிகரிக்கும். ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது எங்கள் வாழ்வில் வரலாற்று மற்றும் பொன்னான தருணங்கள்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com