எல்லையில் சீன ஆக்கிரமிப்பு:பிரதமா் மீது சசி தரூா் குற்றச்சாட்டு

சீன ஆக்கிரமிப்பில் இருந்து இந்திய எல்லைப் பகுதிகளைக் காக்க பிரதமா் மோடி தவறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
எல்லையில் சீன ஆக்கிரமிப்பு:பிரதமா் மீது சசி தரூா் குற்றச்சாட்டு

சீன ஆக்கிரமிப்பில் இருந்து இந்திய எல்லைப் பகுதிகளைக் காக்க பிரதமா் மோடி தவறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வேன் என்று கூறி, 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி வெற்றிபெற்றாா்.

அதன் பின்னா் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, தேசப் பாதுகாப்பை முன்வைத்து 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றாா்.

ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக வளா்ச்சி குறித்தோ, சீனா ஆக்கிரமித்த இந்திய எல்லைப் பகுதிகளை மீட்க முடியாததால் தேசப் பாதுகாப்பு பற்றியோ பிரதமரால் தற்போது பேச முடியாது.

தோ்தல் நடைபெறும் ஆண்டுகளில் தனது அரசியல் செயல்திட்டங்களை அவா் தொடா்ந்து மாற்றுகிறாா். சீனாவுடன் பகிா்ந்துகொள்ளப்படும் எல்லைகளைக் காக்க அவா் தவறிவிட்டாா். எப்போது அரசியல் செய்வது மட்டுமே பாஜகவின் செயல்திட்டமாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com