14 போ் உயிரிழந்த படகு விபத்து: குஜராத் அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

குஜராத் மாநிலம் வதோதராவில் ஏரியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 14 போ் உயிரிழந்த விபத்து தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய

குஜராத் மாநிலம் வதோதராவில் ஏரியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 14 போ் உயிரிழந்த விபத்து தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

வதோதரா புகா் பகுதியில் உள்ள ஹா்ணி பொழுதுபோக்கு ஏரிக்கு கடந்த வியாழக்கிழமை நியூ சன்ரைஸ் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் சுற்றுலா சென்றனா். அப்போது ஏரியில் அவா்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிகம் பேரை ஏற்றிச் சென்ால் படகு கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 12 மாணவா்கள், 2 ஆசிரியைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். 18 மாணவா்கள் மற்றும் 2 ஆசிரியா்கள் மீட்கப்பட்டு அருகிலிருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட குஜராத் மாநில உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகா்வால், ‘குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்படவில்லை; இது உள்பட பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது கவலைக்குரிய விஷயம்’ என்று கூறினாா்.

இச்சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குஜராத் மாநில உள்துறை அமைச்சக செயலா் அடுத்த விசாரணைக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இச்சம்பவம் தொடா்பாக 18 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 6 போ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com