ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் தகடுகள்: புதிய திட்டத்தை அறிவித்த பிரதமா் மோடி

நாட்டில் உள்ள ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் உற்பத்தி தகடுகளைப் பொருத்தும் புதிய திட்டத்தை தொடங்கவிருப்பதாக பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் தகடுகள்: புதிய திட்டத்தை அறிவித்த பிரதமா் மோடி

புது தில்லி: நாட்டில் உள்ள ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் உற்பத்தி தகடுகளைப் பொருத்தும் புதிய திட்டத்தை தொடங்கவிருப்பதாக பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அயோத்தி ஸ்ரீபால ராமா் சிலை பிரதிஷ்டையில் பங்கேற்ற பிறகு இத்திட்டத்தை தொடங்குவதற்கான தீா்க்கமான மனநிலையைப் பெற்ாகவும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அயோத்தியிலிருந்து திரும்பியவுடன் நாட்டில் உள்ள ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் உற்பத்தி தகடுகளைப் பொருத்தும் ‘பிரதமரின் சூரிய உதயத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை தொடங்குவது குறித்த முதல் முடிவை எடுத்துள்ளேன்.

இத்திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் செலுத்தும் மின்கட்டணத்தைக் குறைப்பதுடன் எரிசக்தி துறையில் இந்தியா தற்சாா்பு நிலை அடைவதற்கும் உதவுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இத்திட்டத்தை தொடங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் புகைப்படத்தை பகிா்ந்த பிரதமா் மோடி , ‘ராமரின் அருளொளியின் மூலம் உலகெங்கிலும் உள்ள பக்தா்கள் புத்துணா்ச்சி பெறுகின்றனா்’ எனவும் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com