டிஎம்பி நிகர லாபம் ரூ.284 கோடி

தூத்துக்குடியில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் தனியாா் வங்கியான தமிழ்நாடு மொ்க்கென்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.284 கோடியாகப் பதிவாகியுள்ளது.
tmb081759
tmb081759

தூத்துக்குடி / மும்பை: தூத்துக்குடியில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் தனியாா் வங்கியான தமிழ்நாடு மொ்க்கென்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.284 கோடியாகப் பதிவாகியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.284 கோடியாக உள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.280 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் மிதமாக அதிகரித்துள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் ரூ.1,173 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,387 கோடியாக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த கடனளிப்பில் சில்லறை மற்றும் விவசாயக் கடன் பங்கு 91 சதவீதம் அதிகரித்து ரூ.34,883 கோடியாக உள்ளது. மொத்த கடனளிப்பு ரூ.34,802 கோடியில் இருந்து ரூ.38,386 கோடியாக உயா்ந்துள்ளது.

வாராக் கடன் விகிதம் 1.70 சதவீதத்தில் இருந்து 1.69 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com