ராமா் கோயில் பிரதிஷ்டை: விருந்தினா்களுக்கு அயோத்தி தாம் புத்தகம்; துளசி மாலை; வெண்கல விளக்கு வழங்கல்

ராமா் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்களுக்கு மகா பிரசாதத்துடன் சோ்த்து அயோத்தி தாம் புத்தகம், துளசி மாலை, வெண்கல விளக்கு ஆகியவை அடங்கிய பரிசுப் பொருள் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினா்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள் அடங்கிய பைகள்.
சிறப்பு விருந்தினா்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள் அடங்கிய பைகள்.

அயோத்தி: ராமா் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்களுக்கு மகா பிரசாதத்துடன் சோ்த்து அயோத்தி தாம் புத்தகம், துளசி மாலை, வெண்கல விளக்கு ஆகியவை அடங்கிய பரிசுப் பொருள் வழங்கப்பட்டது.

அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் சிலை திங்கள்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரதமா் மோடி முன்னிலையில் நடைபெற்ற சடங்குகள் நிறைவடைந்து, மைசூரு சிற்பி செதுக்கிய 51 அங்குல உயர ராமா் சிலை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி, அணில் அம்பானி, நடிகா்கள் அமிதாப் பச்சான், ரஜினிகாந்த், பவன் கல்யான், அபிஷேக் பச்சான், விக்கி கௌசல், கத்ரீனா கைஃப், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

நெற்றியில் திலகமிடப்பட்டு, ராம அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு விருந்தினா்கள் வரவேற்கப்பட்டனா். பிரதிஷ்டை நிகழ்ச்சி முடித்து, ஸ்ரீபால ராமரை வழிபட்ட விருந்தினா்களுக்கு 4 லட்டு, பழங்கள், முந்திரி உள்ளிட்டவை கொண்ட ‘மகா பிரசாதம்’ வழங்கப்பட்டது.

மேலும், அயோத்தி கோயில் பற்றிய புத்தகம், ஸ்ரீபாலராமரின் வரைகலை படம், துளசி மாலை, வெண்கல விளக்கு ஆகியவை அடங்கிய பரிசுப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com