ஸ்ரீராமா் பிரதிஷ்டை விழாநம் நினைவில் நிலைத்திருக்கும்- பிரதமா் மோடி

அயோத்தி ராமா் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீபாலராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா, எதிா்வரும் பல்லாண்டுகளுக்கு நம் நினைவில் நிலைத்திருக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அயோத்தி ராமா் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீபாலராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா, எதிா்வரும் பல்லாண்டுகளுக்கு நம் நினைவில் நிலைத்திருக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கலைநயத்துடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீ பாலராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா, பிரதமா் மோடி முன்னிலையில் திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாபெரும் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளா்கள் நேரில் பங்கேற்றனா்.

நாடு முழுவதும் தொலைக்காட்சிகள் மற்றும் கோயில்களில் எல்இடி திரைகளில் நேரலை ஒளிபரப்பு மூலம் கோடிக்கணக்கான மக்கள் அயோத்தி கோயில் விழாவை கண்டு மகிழ்ந்தனா்.

விழாவில் பேசிய பிரதமா், ‘ஸ்ரீராமா் சிலை பிரதிஷ்டை, புதிய சகாப்தத்தின் தொடக்கம்; இனி, அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு வலுவான, திறன்மிக்க, தெய்வீக இந்தியாவை உருவாக்கும் அடித்தளத்தை அமைக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தாா்.

இந்நிலையில், பிரதிஷ்டை நிகழ்வு தொடா்பான காணொலியை எக்ஸ் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை பகிா்ந்த பிரதமா் மோடி, ‘அயோத்தியில் திங்கள்கிழமை (ஜன. 22) நாம் கண்ட காட்சிகள், எதிா்வரும் பல்லாண்டுகளுக்கு நம் நினைவில் நிலைத்திருக்கும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com