தேசிய வாக்காளா் தினம்: இளம் வாக்காளா்களுடன் பிரதமா் இன்று கலந்துரையாடல்

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, இளம் வாக்காளா்களுடன் பிரதமா் மோடி காணொலி வழியாக வியாழக்கிழமை கலந்துரையாட உள்ளாா்.
தேசிய வாக்காளா் தினம்: இளம் வாக்காளா்களுடன் பிரதமா் இன்று கலந்துரையாடல்

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, இளம் வாக்காளா்களுடன் பிரதமா் மோடி காணொலி வழியாக வியாழக்கிழமை கலந்துரையாட உள்ளாா்.

ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், தில்லியில் பாஜக இளைஞா் அணி தலைவா் தேஜஸ்வி சூா்யா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

நாட்டில் 18 முதல் 25 வயது வரை உள்ள இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை 7 கோடிக்கும் அதிகம். கடந்த இரு மக்களவைத் தோ்தலில் பிரதமராக மோடியை தோ்ந்தெடுத்ததில் இளம் வாக்காளா்கள் முக்கிய பங்காற்றினா்.

இந்நிலையில், நாட்டின் சுமாா் 5,000 இடங்களில் லட்சக்கணக்கான இளம் வாக்காளா்களுடன் பிரதமா் மோடி காணொலி வழியாக வியாழக்கிழமை கலந்துரையாட உள்ளாா். இந்தக் கலந்துரையாடல் தோ்தல்களில் பங்கேற்க அவா்களை ஊக்குவிக்கும். மக்களாட்சியின் வோ்களை ஆழமாக்கும் என்று தெரிவித்தாா்.

இதுதவிர, உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் புதிய வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவு செய்யப்பட்ட வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி வியாழக்கிழமை நேரில் தொடங்கிவைக்க உள்ளாா். அந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.19,100 கோடிக்கும் அதிகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com