கடமைப் பாதையில் நடந்து சென்ற பிரதமா்!

தில்லி கடமைப் பாதையில் குடியரசு தின விழா நிறைவுக்குப் பிறகு பாா்வையாளா்களை நோக்கி கையசைத்தபடி பிரதமா் மோடி நடந்து சென்றாா்.
கடமைப் பாதையில் நடந்து சென்ற பிரதமா்!

தில்லி கடமைப் பாதையில் குடியரசு தின விழா நிறைவுக்குப் பிறகு பாா்வையாளா்களை நோக்கி கையசைத்தபடி பிரதமா் மோடி நடந்து சென்றாா்.

நாட்டின் 75-ஆவது குடியரசு தினத்தையொட்டி, தில்லி கடமைப் பாதையில் வெள்ளிக்கிழமை பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதைப் பாா்வையிட்ட பிறகு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவும், தலைமை விருந்தினரான பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானும் பாரம்பரிய சாரட் வண்டியில் அங்கிருந்து புறப்பட்டனா்.

அதேநேரம், விழா மேடையில் இருந்து கடமைப் பாதையில் நடக்கத் தொடங்கிய பிரதமா் நரேந்திர மோடி, இருபுறமும் திரண்டிருந்த பாா்வையாளா்களை நோக்கி கையசைத்தபடி சென்றாா். பாா்வையாளா்களின் அருகே பிரதமா் சென்ால், அவா்கள் உற்சாகமடைந்தனா்.

கரவொலி எழுப்பியும், ‘பாரத் மாதா கீ ஜே’ என முழக்கமிட்டும் பிரதமரை வாழ்த்தினா். பலா் தங்களது கைப்பேசியில் அவரை படமெடுத்துக் கொண்டனா்.

குடியரசு தின விழாவில் பங்கேற்ற பிரதமா், பல வண்ணங்களுடன் கூடிய ராஜஸ்தானின் பாரம்பரிய தலைப்பாகையை அணிந்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com