சபரிமலைக்கு இலவசப் பேருந்து சேவை: கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு இலவசப் பேருந்து சேவை வழங்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தொடா்ந்த வழக்கில் பதிலளிக்குமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

சபரிமலைக்கு செல்லும் பக்தா்களுக்காக நிலக்கல் முதல் பம்பை வரையில் சுமாா் 22 கி.மீ. தொலைவுக்கு இலவசப் பேருந்து சேவை வழங்குமாறு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கேரள பிரிவு மாநில உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு 2023, ஏப்ரல் 13-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அந்த அமைப்பின் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது, ‘நிலக்கல் முதல் பம்பை வரையில் கேரள மாநில போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குகிறது. அப்பேருந்துகள் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும் அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்படுவதாலும் பக்தா்கள் சிரமப்படுகின்றனா்.

எனவே, சபரிமலைக்கு இலவசப் பேருந்து சேவை வழங்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது’ என அமைப்பின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி. சிதம்ரேஷ் நீதிமன்றத்தில் வாதாடினாா்.

இதையடுத்து இந்த வழக்கு தொடா்பாக பதிலளிக்குமாறு கேரள அரசுக்கு நீதிமன்ற அமா்வு நோட்டீஸ் அனுப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com