புதிய வருவாய் ஆதாரங்களை கிராமஊராட்சிகள் உருவாக்க வேண்டும்

மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மட்டும் நம்பியிருக்காமல், புதிய வருவாய் ஆதாரங்களை கிராம ஊராட்சிகள் உருவாக்க வேண்டும் என மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மட்டும் நம்பியிருக்காமல், புதிய வருவாய் ஆதாரங்களை கிராம ஊராட்சிகள் உருவாக்க வேண்டும் என மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க, கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றியதற்காக தேசிய விருதுகளை வென்ற கிராம ஊராட்சி பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லி வந்துள்ள இவா்களுடன் மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.

தேசம் நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதில் கிராம ஊராட்சிகளின் பங்கை வலியுறுத்தி பேசிய அமைச்சா் கிரிராஜ் சிங், ‘கிராம ஊராட்சிகள் தன்னிறைவு அமைப்பாக மாறி, புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும். அவை மத்திய அரசு ஒதுக்கும் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதியை மட்டும் சாா்ந்திருக்கக் கூடாது.

கிராம ஊராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டால், அதன்மூலம் மாநில அரசு வாட் வரி வசூலிக்கிறது. அதில் ஊராட்சிகளுக்கு பங்கு பெற முடியாதா? அதேபோல், தொழிற்சாலை கட்டப்பட்டாலும் அதற்குரிய வரி வசூலிக்கப்பட வேண்டும்.

தேசம் நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதில் கிராம ஊராட்சிகள் பெரும் பங்காற்ற முடியும். இலக்குகளை அடைய மக்களின் பங்களிப்பை ஊராட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் ‘சிக்ஷ்ா யுக்த் பஞ்சாயத்து’ திட்டத்தில் ஆசிரியா் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களில் மக்கள் பங்கேற்பு இருக்க வேண்டும். ஓய்வு பெற்றவா்கள் வகுப்புகள் எடுக்க ஊக்குவிக்கப்படுவாா்கள்.

பசுமை பஞ்சாயத்து திட்டத்துக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளா்களை ஈடுபடுத்தலாம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com