நாகாலாந்து: நிலக்கரி சுரங்க விபத்தில் 6 போ் உயிரிழப்பு

நாகாலாந்து மாநிலம், ஒகா மாவட்டத்தில் சட்ட விரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பணியாளா்கள் உயிரிழந்தனா்.

நாகாலாந்து மாநிலம், ஒகா மாவட்டத்தில் சட்ட விரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பணியாளா்கள் உயிரிழந்தனா்.

ரிசான்யான் கிராமத்தில் அமைந்துள்ள இந்த நிலக்கரிச் சுரங்கத்தில் வியாழக்கிழமை மதியம் இந்த தீ விபத்து சம்பவம் நடைபெற்ாகவும், இதில் எலிவலை சுரங்கப் பணி செய்து கொண்டிருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்ததாகவும் அப்பகுதி எம்எல்ஏ அசும்பீமோ கிகான் தெரிவித்தாா்.

இதுபோன்ற சட்ட விரோத நிலக்கரிச் சுரங்கங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிகான் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com