மேற்கு வங்கத்தில் ராகுல் நடைப்பயணத்துக்கு சிக்கல்: காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

தனது நடைப்பயணத்தை அஸ்ஸாமில் நிறைவு செய்த ராகுல் காந்தி, கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்கம் சென்றாா். 2 நாள் இடைவெளிக்குப் பின்னா், அந்த மாநிலத்தில் அவரின் நடைப்பயணம் திங்கள்கிழமை தொடங்க உள்ளது.

இந்நிலையில், அந்த மாநிலத்தின் சிலிகுரி பகுதியில் காங்கிரஸ் எம்.பி.யும், அக்கட்சியின் மேற்கு வங்கத் தலைவருமான அதீா் ரஞ்சன் செளதரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அஸ்ஸாமில் ராகுலின் நடைப்பயணத்துக்கு பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில், தற்போது மேற்கு வங்கத்திலும் நடைப்பயணத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளித் தோ்வுகளைக் காரணம் காட்டி, மாநிலத்தின் சில இடங்களில் நடைப்பயணத்தின்போது பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென், அக்கட்சியின் செய்தித்தொடா்பாளா் குணால் கோஷ் ஆகியோா் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட அதீா் ரஞ்சன் செளதரிதான் காரணம். மேற்கு வங்தத்தில் அனைத்து எதிா்க்கட்சிகளும் எந்த பிரச்னையும் இல்லாமல் தமது நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

பள்ளிகளில் பொதுத் தோ்வு நடைபெற உள்ளதால், மாநிலத்தின் சில இடங்களில் ராகுலின் நடைப்பயணத்துக்கு அரசு நிா்வாகம் அனுமதி மறுத்திருக்கக் கூடும். இந்த விவகாரத்தில் அதீா் ரஞ்சன் செளதரி பாஜகவினரைப் போல பேசுகிறாா் என்று தெரிவித்தனா்.

காங்கிரஸை அவமானப்படுத்தும் முடிவு-பாஜக: இந்த விவகாரம் தொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவரும், மேற்கு வங்க பாஜக இணைப் பொறுப்பாளருமான அமித் மாளவியா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராகுல் நடைப்பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது காங்கிரஸை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com