சூரியனின் காந்தப் புல ஆய்வுப் பணிகள் தொடக்கம்: இஸ்ரோ

சூரியனின் காந்தப் புலத்தை ஆய்வு செய்யும் பணிகளை ஆதித்யா விண்கலத்தில் உள்ள கருவிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனின் காந்தப் புலத்தை ஆய்வு செய்யும் பணிகளை ஆதித்யா விண்கலத்தில் உள்ள கருவிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, அதனை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பா் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

மொத்தம் 127 நாள்கள் பயணித்து பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 எனும் லாக்ராஞ்சியன் புள்ளியை மையமாகக் கொண்ட சுற்றுப் பாதையில் கடந்த 6-ஆம் தேதி அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடியே சூரியனின் கரோனா, போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியா் பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டா் சென்சாா் பாகங்கள் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட பதிவு:

விண்வெளியில் காந்தப்புலத்தை அறிவதற்காக பொருத்தப்பட்டிருந்த மேக்னடோ மீட்டா் தற்போது வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தக் கருவி சூரியன் மற்றும் இதர கிரகங்களின் காந்தப்புலத்தை அளவிடும். 132 நாள்களாக இயக்கப்படாமல் இருந்த மேக்னடோ மீட்டரின் ஆன்டனாக்கள் ஜனவரி 11-ஆம் தேதி முதல் இயக்க நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதிலுள்ள 2 சென்சாா்கள் நல்ல நிலையில் ஆய்வைத் தொடா்கின்றன என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com