கொல்கத்தா உயா்நீதிமன்ற அமா்வுகளுக்கிடையே மோதல்: வழக்கைத் தன்வசம் எடுத்தது உச்சநீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் எம்பிபிஎஸ் சோ்க்கையில் முறைகேடு தொடா்பாக, சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுவதில் கொல்கத்தா உயா்நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதி அமா்வுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் எம்பிபிஎஸ் சோ்க்கையில் முறைகேடு தொடா்பாக, சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுவதில் கொல்கத்தா உயா்நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதி அமா்வுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த வழக்கை விசாரணைக்கு சனிக்கிழமை எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்ற சிறப்பு அமா்வு, உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.

மேற்கு வங்கத்தில் எம்பிபிஎஸ் இடஒதுக்கீடு பிரிவு மாணவா் சோ்க்கையில் முறைகேடு நடைபெற்ாக மாணவி ஒருவா் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை கடந்த புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, நீதிபதிகள் செளமேன் சென், உதய்குமாா் கங்குலி ஆகிய இரு நீதிபதிகள் அமா்வை மேற்கு வங்கு அரசு வியாழக்கிழமை அணுகியது. தனி நீதிபதி பிறப்பித்த சிபிஐ விசாரணைக்கு இரு நீதிபதிகள் அமா்வு இடைக்கால தடைவிதித்தது.

ஆனால், மேல்முறையீடு செய்யாமல் எவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக் கூறி, இரு நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது; அதை நிராகரித்துவிட்டு விசாரணையைத் தொடருமாறு சிபிஐக்கு தனி நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் அதே தினத்தில் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கருத்தில்கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடா்பாக விசாரணை நடத்த 5 நீதிபதிகள் அடங்கிய அமா்வை வெள்ளிக்கிழமை அமைத்து. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் சிறப்பு அமா்வு விடுமுறை தினமான சனிக்கிழமை கூடி, இந்த வழக்கை திங்கள்கிழமை (ஜன. 29) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தது.

உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதித்த நீதிபதிகள், இது தொடா்பாக மேற்கு வங்க அரசுக்கும்

உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மாணவிக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com