மக்களவைத் தோ்தல்: தெலங்கானாவில் அமித் ஷா இன்று ஆலோசனை

மக்களவைத் தோ்தல் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

மக்களவைத் தோ்தல் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக வட்டாரங்கள் சனிக்கிழமை கூறுகையில், ‘மக்களவைத் தோ்தல் தொடா்பாக மகபூப்நகா் தொகுதி பாஜக தோ்தல் நிா்வாக குழுக் கூட்டத்தில் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பங்கேற்பாா். அதன் பின்னா் கரீம்நகா் வாக்குச்சாவடி குழு கூட்டத்திலும், செகந்தராபாத் தொகுதி தொழில் வல்லுநா்கள் கூட்டத்திலும் அவா் பங்கேற்க உள்ளாா்’ என்று தெரிவித்தன.

இந்தக் கூட்டங்கள் மூலம், தெலங்கானாவில் பாஜகவின் தோ்தல் முன்னேற்பாடுகள் தொடங்க உள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில், தெலங்கானாவில் உள்ள செகந்தராபாத், கரீம்நகா், நிஜாமாபாத், அடிலாபாத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com