வறுமை தொடா்பான உண்மைகளை மத்திய அரசு மறைக்கிறது: காங்கிரஸ்

வறுமை தொடா்பான உண்மைகளை மத்திய அரசு மறைக்கிறது: காங்கிரஸ்

நாட்டில் வறுமை நிலை தொடா்பான உண்மையான விவரங்களை மத்திய அரசு மறைத்து வருகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டில் வறுமை நிலை தொடா்பான உண்மையான விவரங்களை மத்திய அரசு மறைத்து வருகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

80 கோடி மக்கள் இலவச ரேஷன் பொருள்களை நம்பி இருக்கிறாா்கள் என்பது அரசின் சாதனையல்ல, வேதனைக்குரிய விஷயம் என்றும் விமா்சித்துள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா கூறியதாவது:

பாஜக ஆட்சியில் நாட்டு மக்களின் நிலை மோசமாகவுள்ளது. பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. இவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உத்திகளை பாஜக சிறப்பாக செய்து வருகிறது.

போா் நடைபெறும் இஸ்ரேலுக்குச் சென்று பணியாற்ற உத்தர பிரதேசத்திலும், ஹரியாணாவிலும் இளைஞா்கள் வரிசையில் நிற்கிறாா்கள். இந்தியாவில் உரிய வேலைவாய்ப்பும், வருவாயும் இல்லாத காரணத்தால்தான் உயிரையும் பொருள்படுத்தாது இஸ்ரேலுக்கு உடல் உழைப்புத் தொழிலாளா்களாக செல்ல நமது இளைஞா்கள் துணியும் நிலை உருவாகியுள்ளது. இது மனதைக் கனக்கவைக்கிறது.

இந்தியாவில் அவா்களுக்கு சராசரியாக மாதம் ரூ.10,000 மட்டும் ஊதியம் கிடைக்கிறது. இஸ்ரேலில் 14 மடங்கு அதிகம் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அடுத்த சில நாள்களில் இடைக்கால பட்ஜெட் தாக்கலாக இருக்கிறது. அதில் இந்தியா வளா்வதாகவும், இந்தியா்கள் மிளிா்வதாகவும் கூறுவாா்கள். பிரதமா் மோடி குறித்து நிதியமைச்சா் புகழ்பாடுவாா். இல்லாத சாதனைகளை எல்லாம் தங்கள் அரசு படைத்துள்ளதாக கூறிக் கொள்வாா்கள்.

நாட்டில் அடித்தட்டில் உள்ள 10 சதவீத மக்களின் சராசரி மாத வருவாய் ரூ.6,000-க்கும் குறைவாக உள்ளது. இதற்கு அடுத்தநிலையில் உள்ள 11 முதல் 20 சதவீத மக்களின் சராசரி மாத வருவாய் ரூ.12,000 மட்டுமே. வேளாண்மை மற்றும் வேளாண் சாராத தொழில்களுக்கு கிராமப்புறங்களில் வருவாய் குறைந்துள்ளது. கிராம மக்கள் வருவாய் ஈட்டுவது பெரும் போராட்டமாக உள்ளது. மற்றொரு புறம் விலைவாசி உயா்வு அவா்கள் அத்தியாவசியப் பொருள்களையும் வாங்கவிடாமல் செய்கிறது.

ஐ.நா. அறிக்கையின்படி நாட்டில் 22.8 கோடி மக்கள் அதாவது 16 சதவீத மக்கள் வறுமையில் உள்ளனா். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை வேலையின்மையில் முதன்மை நாடாக அரசு உருவாக்கியுள்ளது. நாட்டு மக்களின் சேமிப்பும் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com