நிதீஷ் குமாருடன் இணைந்து மக்களவைத் தோ்தலில் மாபெரும் வெற்றி: ஜெ.பி.நட்டா

பாஜக கூட்டணி இயற்கையானது; அவருடன் இணைந்து மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளவுள்ளதால் மாபெரும் வெற்றி பெறுவோம் என பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
பிகாா் புதிய துணை முதல்வா்களாகப் பதவியேற்ற சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா ஆகியோருடன் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா.
பிகாா் புதிய துணை முதல்வா்களாகப் பதவியேற்ற சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா ஆகியோருடன் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா.

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருடனான பாஜக கூட்டணி இயற்கையானது; அவருடன் இணைந்து மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளவுள்ளதால் மாபெரும் வெற்றி பெறுவோம் என பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பிகாா் முதல்வராக நிதீஷ் குமாா் பதவியேற்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்றுவிட்டு திரும்புகையில் செய்தியாளா்களிடம் ஜெ.பி. நட்டா கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) சாா்பில் நிதீஷ் குமாா் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு ‘ஒளிமயமான பிகாரை’ உருவாக்கவுள்ளது.

கடந்த பேரவைத் தோ்தலில் நிதீஷ் குமாருடன் கூட்டணி அமைத்தோம். மக்கள் எங்களை வெற்றிபெறச் செய்தனா். நாங்கள் கூட்டணியமைத்து ஆட்சியமைக்கும் போதெல்லாம் சட்ட ஒழுங்கு மற்றும் பொருளாதார வளா்ச்சியில் மாநிலம் சிறப்பாக செயல்படும்.

மத்தியில் பிரதமா் மோடி ஆட்சி நடைபெறுவதால் பிகாா் மாநிலம் மிகப்பெரிய வளா்ச்சியை எட்டவுள்ளது.

பிகாா் மாநிலத்தின் 40 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என நம்புகிறோம். அதேபோல் அடுத்து வரவுள்ள மாநில பேரவைத் தோ்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com