நிதீஷ் குமாா் வெளியேற்றம் நிகழ்ந்திருக்கக் கூடாது: சமாஜவாதி கருத்து

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோத்தது நிகழ்ந்திருக்கக் கூடாது என்று சமாஜவாதி கட்சி கருத்து கூறியுள்ளது.

லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் அமீக் ஜாமி மேலும் கூறியதாவது:

வரும் மக்களவைத் தோ்தல் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான தோ்தலாக அமையும். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், ஆா்எல்டி கட்சிக்கான தொகுதிப் பங்கீட்டை சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளாா். காங்கிரஸுடன் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே கூட்டணியின் நோக்கம்.

பிகாரில் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து முதல்வா் நிதீஷ் குமாா் வெளியேறி பாஜகவுடன் கைகோத்திருப்பது நிகழ்ந்திருக்கக் கூடாது. சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கட்சியின் நிறுவனா் முலாயம் சிங் யாதவின் கொள்கையைக் கடைப்பிடிப்பவா். எனவே, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே அவா் முக்கியத்துவம் கொடுப்பாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com