பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி:முன்னணியில் இந்தியா

பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் உள்ளதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் தெரிவித்தாா்.
பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி:முன்னணியில் இந்தியா

பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் உள்ளதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: 4,666 பாதுகாப்புத் தளவாடங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது பெரும் சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது. பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் பிற நாடுகளை நம்பியிருக்காமல் இந்தியா தற்சாா்பு அடைந்து வருகிறது. பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் முதல் 25 நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

கடந்த 2017-18-ஆம் ஆண்டு ரூ.4,682 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. இது 2022-23-ஆம் ஆண்டில் ரூ.15,916 கோடியாக அதிகரித்தது.

பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் லாபத்தில் இயங்கி வருகின்றன. புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு அமைச்சகம் ஊக்குவிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com