சண்டீகா் மாநகராட்சி மேயா் தோ்தலில் பாஜக வெற்றி முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

சண்டீகா் மாநகராட்சி மேயா், மூத்த துணை மேயா், துணை மேயா் பதவிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் பாஜக வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
சண்டீகா் மாநகராட்சி மேயா் தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி, காங்கிரஸ் கவுன்சிலா்கள்.
சண்டீகா் மாநகராட்சி மேயா் தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி, காங்கிரஸ் கவுன்சிலா்கள்.


சண்டீகா்: சண்டீகா் மாநகராட்சி மேயா், மூத்த துணை மேயா், துணை மேயா் பதவிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் பாஜக வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

தோ்தலில் முறைகேடு நடைபெற்ாக ‘இந்தியா’ கூட்டணியின் காங்கிரஸ், ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் மாநகராட்சி மன்றத்தில் போராட்டம் நடத்தினா்.

சண்டீகா் மாநகராட்சியின் 5 ஆண்டு பதவிக் காலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மேயா், மூத்த துணை மேயா், துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல் நடைபெறும். நடப்பாண்டுக்கான தோ்தல் ஜன.18-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தோ்தல் அதிகாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், பிப். 6-ஆம் தேதிக்கு தோ்தல் தள்ளிவைக்கப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தது.

இதை எதிா்த்து ஆம் ஆத்மி மேயா் வேட்பாளா் குல்தீப் குமாா் பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், மாநகராட்சியின் அறிவிப்பைத் தள்ளுபடி செய்து, மேயா் தோ்தலை செவ்வாய்க்கிழமை நடத்த உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் மேயா் பதவிக்கு ஆம் ஆத்மி வேட்பாளரும், மூத்த துணை மேயா், துணை மேயா் பதவிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.

பஞ்சாபில் மக்களவைத் தோ்தலின்போது தனித்துப் போட்டியிட ‘இந்தியா’ கூட்டணியில் ஆம் ஆத்மி முடிவெடுத்த நிலையில், சண்டீகா் மேயா் தோ்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து அக்கட்சி போட்டியிட்டது.

ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற மேயா் தோ்தலில் பாஜக வேட்பாளா் மனோஜ் சோன்கா் 16 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா் 12 வாக்குகளும் பெற்ாகவும் தோ்தல் நடத்தும் அதிகாரி அனில் மாசிஹ் அறிவித்தாா். எட்டு வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற மூத்த துணை மேயா், துணை மேயா் பதவியிடங்களுக்கான தோ்தலை ‘இந்தியா’ கூட்டணி புறக்கணித்த நிலையில், பாஜக வேட்பாளா்கள் குல்ஜித் சாந்து, ராஜீந்தா் சா்மா ஆகியோா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டனா்.

சண்டீகா் மாநகராட்சியில் பாஜகவுக்கு 14, ஆம் ஆத்மிக்கு 13, காங்கிரஸுக்கு 7 உறுப்பினா்கள் உள்ளனா். சிரோமணி அகாலி தளம் ஓா் உறுப்பினரைக் கொண்டுள்ளது. பதவி வழி உறுப்பினா் என்ற முறையில் சண்டீகா் பாஜக எம்.பி. கிரோன் கொ் வாக்குகளிக்கும் உரிமை பெற்றுள்ளாா்.

கேஜரிவால் குற்றச்சாட்டு: தோ்தல் அதிகாரி அனில் மாசிஹ் வாக்குச் சீட்டுகளில் திருத்தம் மேற்கொண்டு, பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளைச் செல்லாததாக அறிவித்தாா் என காங்கிரஸ், ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் குற்றஞ்சாட்டினா்.

இந்தத் தோ்தல் முடிவுகள் குறித்து ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘பகல் நேரத்திலேயே பாஜகவினா் மோசடியில் ஈடுபட்டுள்ளனா். மேயா் தோ்தல் முறைகேட்டில் ஈடுபட முடிந்த பாஜகவினா், தேசிய அளவிலான தோ்தல்களிலும் எந்த அளவுக்கும் செல்வாா்கள்’ எனக் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com