சொத்துத் தகராறு: இளைஞா் மீது தாக்குல்

வடக்கு தில்லியின் நரேலா பகுதியில் சொத்துத் தகராறில் இளைஞா் ஒருவரை ஒரு குப்பல் தாக்கியது தொடா்பாக விசாரித்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.


புது தில்லி: வடக்கு தில்லியின் நரேலா பகுதியில் சொத்துத் தகராறில் இளைஞா் ஒருவரை ஒரு குப்பல் தாக்கியது தொடா்பாக விசாரித்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி புகா் வடக்கு சரக காவல் துணை ஆணையா் ரவிக்குமாா் சிங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நரேலா மாா்க்கெட் பகுதியில் இளைஞா் ஒருவரை சிலா் கட்டையால் அடிப்பது போன்ற விடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அதில் 6 போ் கொண்ட கும்பல் அந்த இளைஞரை கொடூரமாக தாக்குவது பதிவானது. அந்த இளைஞரை ஒரு பெண் காப்பாற்ற முயற்சிப்பதும் பதிவாகியிருந்தது.

இது குறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது. தாக்குதலுக்குள்ளானவா் ஹோலம்பி குா்த் கிராமத்தில் வசிக்கும் தீபக் (32) என்று அடையாளம் காணப்பட்டாா். அவா் ஷேரத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சைக்குப் பின்னா், டிஸ்சாா்ஜ் செய்யப்பட்ட பின்னா் ஞாயிற்றுக்கிழமை தனது வாக்குமூலத்தையும் கொடுத்தாா்.

அதன்பேரில், ஐபிசி-இன் 323 (தன்னிச்சையாக காயப்படுத்தியதற்காக தண்டனை), 341 (தவறான தடைக்கான தண்டனை), 506 (கிரிமினல் மிரட்டலுக்கான தண்டனை) மற்றும் 34 (பொது நோக்கம்) 325 (தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பினருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளதும். குற்றம் சாட்டப்பட்டவா்களைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com